குறுக்கு வழி தேடும் மாந்தர்களே (எதற்கும்)
குறுக்கு வழி தேடும் மாந்தர்களே !
இந்த குற்றால குறத்தி குறி சொல்வேனைய்யா!
காசு பணம் செலவழித்து நீ காத தூரம் போக வேண்டாம்
குருநாதன் பாத தீர்த்தம் கங்கையாம் புனித யமுனையாம்!
பாபத்திற்குப் பரிகாரம் என்று அங்கும் இங்கும் அலைய வேண்டாம்
குருநாதன் பார்வை பட்டபின்பு பாபம் என்றும் ஒன்றுள்ளதோ!
பக்தி வளர என்ன வழி என்று பரிதவிக்க வேண்டாமே
குருநாதன் அமுது செய்ததை உண்டால் பக்தி தானே வளருமே
முக்தி அடைய என்ன வழி என்று முட்டி மோத வேண்டாமே
குருநாதன் திருவடி தூளியில் அந்த முக்தி இருக்குதய்யா!
நான்கையும் கை கொள்வீரானால் உங்கள் பார்வை உள்ளே திரும்பிடுமே
உள்ளே உள்ளே போக போக எல்லை இல்லா ஆனந்தமே!
நல்ல பலனும் சொல்லிவிட்டேன் எனக்கு காசு பணமும் வேண்டாமே!
குருநாதனிடம் என் பொருட்டு ஒரு வார்த்தை சொல்வீரய்யா !