Mahamantra Anthem - Tamil




 1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத
கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே!

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும்
ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும்
கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும்
அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே
அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே
அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும்
குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம்
யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும்
பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே
பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம்
உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

15. இருந்த இடத்தில் இருந்த படியே
வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும்
பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

Bookmark and Share