Enchanting Experiences #1

அனுபவம் அருமை - 1

தூத்துக்குடி நேரு பிரகாஷ் அவர்கள் நம் சத்சங்கத்தை சேர்ந்தவர். அவர் தான் தூத்துக்குடி நாமத்வாரை கட்டி கொடுத்தவர். அதை நன்றாக நடத்தியும் வருகிறார். சென்ற மாதத்தில் ஒரு நாள் அவருடைய மகன் விக்கேஷ் ஸ்ரீ ஸ்வாமிஜியை பார்க்க ப்ரேமிக பவனம் வந்திருந்தார். அப்பொழுது அவருடைய

மனைவிக்கு வளைகாப்பு செய்வதற்கு நல்ல நாள், மற்றும் நேரம் இவைகளை குறித்து கொடுத்தார். ஆடி பூரத்தன்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றிய வளையல்கள் இருந்தால் பிரசாதமாக கொடுத்து அனுப்பலாமே என்று நினைத்து தேடினார். ஆனால் ப்ரேமிக பவனத்தில் அந்த வளையல்கள் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீ தீனதயாளன் என்ற பக்தர் குடும்பத்துடன் தர்சனத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் தான் படைவீடு சென்று ரேணுகா தேவியை தர்சித்து வருவதாகவும், அப்பொழுது அங்கு பூஜை செய்பவர் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இந்த பையை தர சொன்னார் என்று ஒரு பையை தந்தார். பையை திறந்து பார்த்தால், பை நிறைய வளையல்கள். அதை விக்கேஷிடம் அப்படியே கொடுத்தார். 

அப்பொழுது ஸ்ரீ ஸ்வாமிஜி பக்கத்தில் இருப்பவரிடம், “*சிலர் யோக சித்தியால் நினைத்த பொருளை வர வைப்பார்கள்; நமக்கு அது தேவையில்லை. ஏனெனில் நமக்கு தேவையான பொருளை பகவானே நம் கையில் கொண்டு போட்டு விடுகிறார்!* “ என்றார்.