Enchanting Experiences #2

 ஸ்ரீநிவாஸன் ஸ்ரீ ஸ்வாமிஜியின் பரம பக்தர். பரம பாகவதர். ஸ்ரீ ஸ்வாமிஜி ஆரம்ப


காலத்தில், தினமும் ப்ரேமிக பவனத்தில் கீர்த்தனம் செய்வார். மாலை 6 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 11-12 மணி என்று போய்க் கொண்டே இருக்கும். அப்பொழுது முதல், தினமும் கீர்த்தனத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீநிவாஸன் டோல்கீ வாசிப்பார். அவர் இப்பொழுது சொந்தமாக Company ஆரம்பித்து பெரிய Businessman ஆகிவிட்டார். 2024 நவம்பர் 8ம் தேதி அவர் கட்டிய புதிய வீட்டிற்கு க்ருஹபிரவேசம்-ஸ்ரீ ஸ்வாமிஜியை அழைத்திருந்தார். ஸ்ரீ ஸ்வாமிஜியும் மாலை 4 மணி அளவில் சென்றிருந்தார். வீட்டை எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு ஒரு இடத்தில் அமர்ந்தார். அப்பொழுது, ஸ்ரீ ஸ்வாமிஜியின் கண்கள் யாரையோ தேடியது. நம்முடைய ஸத்ஸங்கத்தை சேர்ந்த மேதா வெங்கட்ராமன், ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு சொந்தம். ஸ்ரீ ஸ்வாமிஜி மேதா வெங்கட்ராமனை அழைத்து அமர சொன்னார். பிறகு மேதா வெங்கட்ராமனை பார்த்து "இன்று போல் என்றும் எனை நீ காத்திடல் வேண்டும்" என்ற மதுரகீதம் பாடலை பாட சொன்னார். அவ்வளவுதான், ஸ்ரீநிவாசன் ஒரே ஆனந்த கூத்தாடி அழ ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீ ஸ்வாமிஜி அவரைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் சிரித்தார். விஷயம் என்னவென்றால், அவர் காலையிலேயே மேதா வெங்கட்ராமனை அழைத்து, இன்று ஸ்ரீ ஸ்வாமிஜி வருவார், யாராவது பாடுகின்றீர்களா என்று கேட்டால், நான் பாடுகின்றேன் என்று சொல்ல வேண்டும். அதுவும் "இன்று போல் என்றும் எனை நீ காத்திடல் வேண்டும்" என்ற மதுரகீத கீர்த்தனையைத் தான் பாட வேண்டும், என்று பலமுறை சொல்லி வைத்திருந்தார். அதை அப்படியே நிகழ்த்தி காட்டியவுடன், அவருடைய அனுபவம் ஆச்சர்யம் கலந்த ஆனந்தமாக அமைந்தது.