சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்வாமிஜியை தரிசனம் செய்ய ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவர்கள், தங்களுடைய குழந்தை ஜாதகத்தை காண்பித்து, “எப்பொழுது கல்யாணம் ஆகும்?”என்று கேட்டார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜியும் சிரித்தபடியே, “சீக்கிரம் நடக்கும், கவலை வேண்டாம்” என்றார். அவர்கள் மீண்டும் மீண்டும், “என்ன பரிகாரம் செய்யலாம்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜியும்
, “தங்கள் வீட்டிற்கு அருகில் நவகிரகம் சந்நிதி இருந்தால், தினமும் ப்ரதக்ஷிணம் செய்து வாருங்கள்” என்றார். அவர்களோ, “தங்கள் வீட்டின் அருகில் அப்படி எந்த சந்நிதியும் இல்லை”, என்றார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜி உடனே அந்த ஜாதகத்தை கையில் வாங்கி சில நிமிடங்கள் ஜபம் செய்தார். மீண்டும் அந்த ஜாதகத்தை அவர்களிடம் கொடுத்து, “இதை ஒரு அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள். ஒரு Stoolல் வைத்து நவக்கிரகத்தை சுற்றி வருவது போல் தினமும் சுற்றி வாருங்கள்”. என்றார். வெகு நாட்கள் கழித்து ஒரு Public Programல் ஸ்ரீ ஸ்வாமிஜியை தரிசனம் செய்தார்கள்.“தாங்கள் சொன்னது போலவே செய்தோம், ஒரு மாதத்தில் கல்யாணம் கைகூடிவிட்டது” என்றார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம் சிரித்துக் கொண்டே, “உங்கள் நம்பிக்கை தான் எல்லாவற்றிக்கும் காரணம்” என்றார்.