ப்ரேமிகவிட்டலன் மற்றும் ராமகிருஷ்ணன் நமது கலெடிப்பேட்டை நாமத்வாரை சேர்ந்த சிறுவர்கள். அவர்களுக்கு 15/16 வயதிருக்கும். பிறந்தது முதலே நம் சத்சங்கத்தில் இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 1 2024 சென்னை, கூடுவாஞ்சேரி அபயம் பஜனை மந்திரில் ஸ்ரீ ஸ்வாமிஜி, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஆசிரமம் திரும்பி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராமகிருஷ்ணன் மற்றும் ப்ரேமிகவிட்டலன் bikeல் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களை பார்த்துவிட்டார். தனது காரை அவர்கள் அருகில் சென்று நிறுத்திவிட்டார். அவர்களுடைய வண்டி சாவியை வாங்கிக்கொண்டார்.
அவர்களிடம் licence எங்கே? ஏன் helmet அணியவில்லை என்று கடுமையான் தொனியில் கேட்டார். பயந்து போன அந்த சிறுவர்கள் licence இல்லை, ஹெல்மெட் எடுத்து வரவில்லை என்று சமாளித்தனர். ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம் நீங்கள் fine (அபராதம்) கட்டவேண்டும் என்று கூறினார்.
அதை கேட்ட சிறுவர்கள், “குருஜி, நாங்கள் வேண்டுமானால் மூன்று முறை ஹரே ராமா மஹாமந்திரம் சொல்கிறோம்- எங்களை மன்னித்து விடுங்கள்“ என்று கூறினர். அந்த பதிலை கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி மிகவும் நெகிழ்ந்தார். அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தார்.
- Bharath Ganapathy ji