Enchanting Experiences #5

 அனுபவம் அருமை - 5

https://www.facebook.com/share/VmuRyxzetjiG9a1F/?mibextid=wwXIfr

ஸ்ரீ கணேஷ் வேலூரை சேர்ந்தவர். அவர் குடும்பமே ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் பக்தியும், ப்ரியமும் கொண்டவர்கள். குடும்பமாக நாமம் சொல்வதோடு, அவர்கள் ஊரில் நிறைய நாம கைங்கர்யமும் செய்து வருகின்றனர். 

அவர் ஒரு அரசுத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பணிக்காலத்தின் அடிப்படையில், 2024ன் முடிவில் அவருக்கு பதவி உயர்வு வரவேண்டும். அவருக்கு அது சந்தோஷம் என்றாலும், பொதுவாக பதவி உயர்வின் போது, பணிமாறுதலும் (transfer) வரும். இது பொதுவான நடைமுறை. இதை தவிர்க்கமுடியாது. Transfer வந்தால் குழந்தையின் கல்வி, கைங்கர்யம் தடைபடுமே, என்ன செய்யலாம் என்று கலக்கம். 

December 11 ஏகாதசியன்று மதுரபுரி ஆஸ்ரமம் வந்திருந்த ஸ்ரீ கணேஷ் இந்த விஷயங்களை ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் விவரித்தார். அனைத்தையும் கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும்- எந்த கலக்கமும் வேண்டாம் என்று ஆசியளித்தார். அவரும் நம்பிக்கையுடன் திரும்பி சென்றார். 

மறுநாளே (டிசம்பர் 12) promotion and transfer orders வந்தது. இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவெனில், அவர் promotionல் join செய்யவேண்டிய அலுவலகமும் அதே ஊரில், அதே வளாகத்திலேயே உள்ளது! Promotion வந்தது, transfer வந்தது - ஆனால் அதே ஊரில், அதே வளாகத்தில்! இன்னொரு ஆச்சர்யம்- 62 பேருக்கு வழங்கப்பட்ட பதவியுயர்வு நியமனத்தில் ஸ்ரீ கணேஷ் ஒருவருக்கு மட்டுமே இப்படி நடந்தது. குருக்ருபையில் எதுதான் சாத்தியமில்லை!

- Bharath Ganapathy Ji

Enchanting Experiences #4

 ப்ரேமிகவிட்டலன் மற்றும் ராமகிருஷ்ணன் நமது கலெடிப்பேட்டை நாமத்வாரை சேர்ந்த சிறுவர்கள். அவர்களுக்கு 15/16 வயதிருக்கும். பிறந்தது முதலே நம் சத்சங்கத்தில் இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 1 2024 சென்னை, கூடுவாஞ்சேரி அபயம் பஜனை மந்திரில் ஸ்ரீ ஸ்வாமிஜி, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஆசிரமம் திரும்பி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராமகிருஷ்ணன் மற்றும் ப்ரேமிகவிட்டலன் bikeல் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களை பார்த்துவிட்டார். தனது காரை அவர்கள் அருகில் சென்று நிறுத்திவிட்டார். அவர்களுடைய வண்டி சாவியை வாங்கிக்கொண்டார். 


அவர்களிடம் licence எங்கே? ஏன் helmet அணியவில்லை என்று கடுமையான் தொனியில் கேட்டார். பயந்து போன அந்த சிறுவர்கள் licence இல்லை, ஹெல்மெட் எடுத்து வரவில்லை என்று சமாளித்தனர். ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம் நீங்கள் fine (அபராதம்) கட்டவேண்டும் என்று கூறினார். 

அதை கேட்ட சிறுவர்கள், “குருஜி, நாங்கள் வேண்டுமானால் மூன்று முறை ஹரே ராமா மஹாமந்திரம் சொல்கிறோம்- எங்களை மன்னித்து விடுங்கள்“ என்று கூறினர். அந்த பதிலை கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி மிகவும் நெகிழ்ந்தார். அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தார்.

- Bharath Ganapathy ji

Enchanting Experiences #3

 சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்வாமிஜியை தரிசனம் செய்ய ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவர்கள், தங்களுடைய குழந்தை ஜாதகத்தை காண்பித்து, “எப்பொழுது கல்யாணம் ஆகும்?”என்று கேட்டார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜியும் சிரித்தபடியே, “சீக்கிரம் நடக்கும், கவலை வேண்டாம்” என்றார். அவர்கள் மீண்டும் மீண்டும், “என்ன பரிகாரம் செய்யலாம்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜியும்


, “தங்கள் வீட்டிற்கு அருகில் நவகிரகம் சந்நிதி இருந்தால், தினமும் ப்ரதக்ஷிணம் செய்து வாருங்கள்” என்றார். அவர்களோ, “தங்கள் வீட்டின் அருகில் அப்படி எந்த சந்நிதியும் இல்லை”, என்றார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜி உடனே அந்த ஜாதகத்தை கையில் வாங்கி சில நிமிடங்கள் ஜபம் செய்தார். மீண்டும் அந்த ஜாதகத்தை அவர்களிடம் கொடுத்து, “இதை ஒரு அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள். ஒரு Stoolல் வைத்து நவக்கிரகத்தை சுற்றி வருவது போல் தினமும் சுற்றி வாருங்கள்”. என்றார். வெகு நாட்கள் கழித்து ஒரு Public Programல் ஸ்ரீ ஸ்வாமிஜியை தரிசனம் செய்தார்கள்.“தாங்கள் சொன்னது போலவே செய்தோம், ஒரு மாதத்தில் கல்யாணம் கைகூடிவிட்டது” என்றார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம் சிரித்துக் கொண்டே, “உங்கள் நம்பிக்கை தான் எல்லாவற்றிக்கும் காரணம்” என்றார்.