திருமதி ராஜேஸ்வரி சீத்தாராமன் தஞ்சாவூரை சேர்ந்தவர். 2009 முதல் நமது நாம குடும்பத்தில் இருப்பவர். அவருக்கு வாழ்வில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், ஸ்ரீ ஸ்வாமிஜியின் திருவுருவ படத்திற்கு(photo) முன் ஒரு கடிதம் எழுதி வைத்து மனமுருகி பிரார்த்திப்பார். அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறும் என்பது அவர் நம்பிக்கை.
இவரது இரண்டாவது பெண் அமெரிக்காவில் இருந்தார். 2022ம் ஆண்டு இறுதியில்
அவருக்கு ஒரு உடல்நல கோளாறு ஏற்பட்டது. அவரது கர்பப்பை (uterus) அருகில் ஒரு கட்டி (cyst) இருந்ததால், ஒரு கருவகம் (ovary) அகற்றப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்ரீ ஸ்வாமிஜி தஞ்சை வந்திருந்தார். அப்போது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது மகளின் உடல்நிலை குறித்து ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார். அனைத்தையும் பரிவுடன் கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி, அவரிடம் நீங்கள் விரைவில் பாட்டி ஆவீர்கள் என்று ஆசியளித்தார்.
திருமதி ராஜேஸ்வரிக்கு ஒரே குழப்பம்- ஒரு ovary அகற்றப்பட்டதால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு, அப்படி வாய்ப்பு இருந்தாலும் காலதாமதமாகும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்- ஆனால் ஸ்வாமிஜியோ நீங்கள் விரைவில் பாட்டி ஆவீர்கள் என்று சொல்கிறாரே என்று. ஒருவேளை தன்னை சமாதானப் படுத்துவதற்காக சொல்கிறார் போல என்றே நினைத்தார்.
ஆனால் ஸ்வாமிஜி சமாதானத்திற்காக சொல்லவில்லை- சத்தியத்தையே சொன்னார் என்பது விரைவில் புரிந்தது- சரியாக மூன்று மாதத்தில் அமெரிக்காவில் உள்ள திருமதி ராஜேஸ்வரியின் மகள் கருவுற்றார்! பிப்ரவரி 17 2024 ரோஹினி நட்சத்தரத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு “முரளீதரன்” என்று பெயரிட்டனர்!