Enchanting Experiences #7

அனுபவம் அருமை- 7 !

https://www.facebook.com/share/18dX2bKz2r/?mibextid=wwXIfr

ஸ்ரீ ராமசந்திரன்- ஸ்ரீமதி சாவித்திரி தம்பதியினர் நீண்ட நாளைய ஸ்ரீ ஸ்வாமிஜியின் பக்தர்கள். சென்னை ஜாபர்கான்பேட்டையில் ப்ரேமிக பவனம் அருகில் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் மகளை பார்பதற்காக சென்ற ஆண்டு அமெரிக்கா சென்றனர். விமானத்தில் டெல்லி வழியாக 2024 செப்டம்பர் 17 காலை Chicago O’Hare International airport சென்றனர். அவர்கள் விமானம் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்கள் முன் அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. திருமதி சாவித்திரி அவர்களின் வலது காதில் இருந்த வைரத்தோடும், திருகும் திடீரென காணவில்லை. உறங்கும் போது திருகு loose ஆகி விழுந்து விட்டது போல. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக தேடிவிட்டனர். திருகு மட்டுமே கிடைத்தது; வைரத்தோடு கிடைத்தபாடில்லை. வைரம் என்பதால் விலையுயர்ந்தது மட்டுமல்ல; sentiment விஷயமும் கூட. மனக்கலக்கத்தோடு சோர்ந்துவிட்டனர். 

விமானமும் சிகாகோ வந்து சேர்ந்து விட்டது. எல்லோரும் இறங்கி விட்டார்கள்.


விமான பணியாளர்களும் அவர்களோடு சேர்ந்து தேடியும் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு திடீரென தோன்ற, மனதிற்குள் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பிரார்தித்து மஹாமந்திரம் சொன்னார்கள். அதற்குள் security agency விமானத்திற்குள் வந்துவிட்டார்கள். வேறு வழியே இல்லை- விமானத்தில் இருந்து உடனே இறங்க வேண்டும். அந்த தம்பதியினர் security அலுவலர்களிடம் நடந்த விஷயங்களை கூறினர். அவர்கள் உங்கள் நிலை புரிகிறது- உங்கள் திருப்திக்காக இன்னும் ஒருமுறை மட்டும் தேடுவோம் என்று அவர்களே தேடினர். என்ன ஆச்சர்யம்- சரியாக 2 நிமிடங்களில் வைரத்தோடு கிடைத்துவிட்டது!!

விமானப் பணியாளர்கள் நாங்கள் இவ்வளவு நேரம் இங்கு தான் தேடினோம், கிடைக்கவில்லை- it’s a miracle! என்று சொன்னார்கள். ஸ்ரீ ராமச்சந்திரன்- ஸ்ரீமதி சாவித்திரி தம்பதியினரோ “With sincere Prayers to Sri Swamiji and Mahamantra, anything is possible!” என்று நினைத்து கொண்டே அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தனர் 


- Bharath Ganapathy Ji

Bookmark and Share