Enchanting Experiences #8

 அனுபவம் அருமை - 8


https://www.facebook.com/share/15BGzhVvvU/?mibextid=wwXIfr

English Translation Available Below

சென்னை KK Nagar பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ ரகு. இவரது மனைவி ஸ்ரீமதி வசுமதி. இவர்களது மூத்த மகன் ஸ்ரீ அரவிந்த். அவருக்கு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்கவேண்டும் என்பது லட்சியம். பல வருடங்களுக்கு முன்னர் அவர்கள் குடும்பமாக ஸ்ரீ ஸ்வாமிஜியை சந்தித்த போது, ஸ்ரீ அரவிந்த் இந்த தனது ஆசையை ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் பகிர்ந்து கொண்டார். அவரும் தகுந்த காலத்தில் இந்த அபிலாஷை சிறப்பாக நிறைவேறும் என்று ஆசியளித்தார். 

2010 மே மாதம் சென்னையில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தபிறகு, லண்டனில்


படிக்க விண்ணப்பித்தார். லண்டன் காலேஜ் ஒன்றில் அனுமதி கிடைத்தது. ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் சென்று தெரிவிக்க இப்போது சேர வேண்டாம், பிறகு பார்க்கலாம் என்றார். அடுத்த மாதம் லண்டனில் Imperial Collegeல் அட்மிஷன் கிடைத்தது. அதையும் ஸ்ரீ ஸ்வாமிஜி வேண்டாம் என்று கூறிவிட, அவர்களுக்கு ஒரே குழப்பம். ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை- இருந்தாலும் அவரை அண்டி வந்துவிட்டோம், அவர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று திடமாக இருந்தனர். இது நடந்த சில வாரங்களில், ஸ்ரீ அரவிந்தின் பிரியமான பாட்டி 96 வயதில் காலமானார். இவ்வளவு நாள் ஏன் ஸ்வாமிஜி வெளிநாடு செல்ல அனுமதி தரவில்லை என்பது புரிந்தது. 

விரைவிலேயே லண்டன் Oxford Universityல் அவருக்கு அவரது Bio- Medical துறையிலேயே MS மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஸ்ரீ ஸ்வாமிஜியும் இப்போது செல்லலாம் என்று அனுமதியும், ஆசியும் அளித்தார். விமான டிக்கெட் எடுத்தாயிற்று, bank லோன் கிடைத்துவிட்டது; ஆனால் விசா ( Visa) வரவில்லை. சரியான நேரத்தில் visa வரவில்லையெனில் அனைத்து ஏற்பாடுகளும் வீண். செப்டம்பர் 15 2010 - அன்று தான் அவருக்கு flight டிக்கெட் book செய்திருந்தனர். செப்டம்பர் 13 இரவு வரை விசா குறித்த எந்த செய்தியும் இல்லை. 

செப்டம்பர் 14 2010 - அன்று தான் கடைசி வாய்ப்பு. கலங்கிய அவர்கள், அன்று காலை ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் சென்று பிரார்த்தித்தனர். அவர் எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நம்பிக்கை அளித்தார். அன்று முழுவதுமே அரைமணிக்கு ஒருமுறை ஆன்லைனில் visa status பார்த்துக்கொண்டே இருந்தனர்-மாலை 6 வரை - “ Your visa application is under process” என்றே வந்தது. மாலை 6 மணிக்கு அந்த அலுவலகம் மூடப்படும். இருந்தாலும் ஸ்ரீ ஸ்வாமிஜி எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று சொல்லியுள்ளார் என்ற நம்பிக்கையோடு நாமம் சொல்லி வந்தனர். இரவு 7.30 மணிக்கு பார்த்தபோது - அதிசயமாக அலுவலக நேரம் முடிந்தபிறகு - “ Your visa application has been processed and is ready for collection“ என்பதை பார்த்த பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டனர். திட்டமிட்டபடி லண்டன் சென்றார். MS முடித்தபிறகு Oxford யுனிவர்சிட்டியிலேயே PhD டாக்டர் பட்டம் 26 வயதிலேயே வாங்கினார். ஸ்ரீ அரவிந்த் இன்று ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார். இன்றும் நிறைய நாமம் சொல்லி வருகிறார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

English Translation 


Sri Raghu is a resident of KK Nagar, Chennai. He, his wife Smt Vasumathi and their elder son Sri Aravind are all devoted to Sri Swamiji. Aravind's ambition was to pursue higher studies abroad. Many years ago when their family had Sri Swamiji’s darshan, Aravind shared this desire with him. Swamiji blessed him, saying that this wish would be fulfilled at the right time.


In May 2010, after completing his engineering degree in Chennai, Aravind applied to study in London. He was admitted to a college in London. However, when they informed Sri Swamiji, he advised them not to join immediately and to wait. The next month, Aravind received admission to Imperial College London. When Sri Swamiji again advised against joining, the family was confused and couldn’t understand why. Despite their confusion, they trusted Sri Swamiji completely and decided to follow his guidance.  A few weeks later, Aravind's beloved grandmother passed away at the age of 96. It then became clear why Sri Swamiji had not permitted him to leave abroad earlier.


Soon after, Aravind secured admission to Oxford University in London for his MS in the field of Biomedical Sciences. This time, Swamiji gave his blessing and permission to proceed. The flight ticket was booked, and the bank loan was approved, but the visa had not yet been issued. Without the visa arriving on time, all arrangements would be in vain. His flight was booked for September 15, 2010, but until the night of September 13, there was no news about the visa.


September 14, 2010 was the last chance. Feeling distressed, they went and prayed to Sri Swamiji that morning. He assured them that everything would go well. Throughout the day, they kept checking the online visa status every half an hour, but until 6 PM, it kept showing "Your visa application is under process." The office was supposed to close at 6 PM. However, trusting Swamiji's words, they continued chanting nama. 


When they checked at 7:30 PM, miraculously -after office hours - the status had changed to "Your visa application has been processed and is ready for collection." They breathed a sigh of relief. As planned, Aravind traveled to London. After completing his MS, he earned his PhD from Oxford University at the age of 26. 


Today, Sri Aravind holds a prestigious position in a major multinational company. He continues to chant nama regularly even now.

Enchanting Experiences #7

அனுபவம் அருமை- 7 !

https://www.facebook.com/share/18dX2bKz2r/?mibextid=wwXIfr

ஸ்ரீ ராமசந்திரன்- ஸ்ரீமதி சாவித்திரி தம்பதியினர் நீண்ட நாளைய ஸ்ரீ ஸ்வாமிஜியின் பக்தர்கள். சென்னை ஜாபர்கான்பேட்டையில் ப்ரேமிக பவனம் அருகில் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் மகளை பார்பதற்காக சென்ற ஆண்டு அமெரிக்கா சென்றனர். விமானத்தில் டெல்லி வழியாக 2024 செப்டம்பர் 17 காலை Chicago O’Hare International airport சென்றனர். அவர்கள் விமானம் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்கள் முன் அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. திருமதி சாவித்திரி அவர்களின் வலது காதில் இருந்த வைரத்தோடும், திருகும் திடீரென காணவில்லை. உறங்கும் போது திருகு loose ஆகி விழுந்து விட்டது போல. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக தேடிவிட்டனர். திருகு மட்டுமே கிடைத்தது; வைரத்தோடு கிடைத்தபாடில்லை. வைரம் என்பதால் விலையுயர்ந்தது மட்டுமல்ல; sentiment விஷயமும் கூட. மனக்கலக்கத்தோடு சோர்ந்துவிட்டனர். 

விமானமும் சிகாகோ வந்து சேர்ந்து விட்டது. எல்லோரும் இறங்கி விட்டார்கள்.


விமான பணியாளர்களும் அவர்களோடு சேர்ந்து தேடியும் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு திடீரென தோன்ற, மனதிற்குள் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுங்கள் என்று பிரார்தித்து மஹாமந்திரம் சொன்னார்கள். அதற்குள் security agency விமானத்திற்குள் வந்துவிட்டார்கள். வேறு வழியே இல்லை- விமானத்தில் இருந்து உடனே இறங்க வேண்டும். அந்த தம்பதியினர் security அலுவலர்களிடம் நடந்த விஷயங்களை கூறினர். அவர்கள் உங்கள் நிலை புரிகிறது- உங்கள் திருப்திக்காக இன்னும் ஒருமுறை மட்டும் தேடுவோம் என்று அவர்களே தேடினர். என்ன ஆச்சர்யம்- சரியாக 2 நிமிடங்களில் வைரத்தோடு கிடைத்துவிட்டது!!

விமானப் பணியாளர்கள் நாங்கள் இவ்வளவு நேரம் இங்கு தான் தேடினோம், கிடைக்கவில்லை- it’s a miracle! என்று சொன்னார்கள். ஸ்ரீ ராமச்சந்திரன்- ஸ்ரீமதி சாவித்திரி தம்பதியினரோ “With sincere Prayers to Sri Swamiji and Mahamantra, anything is possible!” என்று நினைத்து கொண்டே அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தனர் 


- Bharath Ganapathy Ji

Enchanting Experiences #6

 திருமதி ராஜேஸ்வரி சீத்தாராமன் தஞ்சாவூரை சேர்ந்தவர். 2009 முதல் நமது நாம குடும்பத்தில் இருப்பவர். அவருக்கு வாழ்வில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், ஸ்ரீ ஸ்வாமிஜியின் திருவுருவ படத்திற்கு(photo) முன் ஒரு கடிதம் எழுதி வைத்து மனமுருகி பிரார்த்திப்பார். அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறும் என்பது அவர் நம்பிக்கை. 


இவரது இரண்டாவது பெண் அமெரிக்காவில் இருந்தார். 2022ம் ஆண்டு இறுதியில்


அவருக்கு ஒரு உடல்நல கோளாறு ஏற்பட்டது. அவரது கர்பப்பை (uterus) அருகில் ஒரு கட்டி (cyst) இருந்ததால், ஒரு கருவகம் (ovary) அகற்றப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்ரீ ஸ்வாமிஜி தஞ்சை வந்திருந்தார். அப்போது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தனது மகளின் உடல்நிலை குறித்து ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார். அனைத்தையும் பரிவுடன் கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி, அவரிடம் நீங்கள் விரைவில் பாட்டி ஆவீர்கள் என்று ஆசியளித்தார். 


திருமதி ராஜேஸ்வரிக்கு ஒரே குழப்பம்- ஒரு ovary அகற்றப்பட்டதால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு, அப்படி வாய்ப்பு இருந்தாலும் காலதாமதமாகும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்- ஆனால் ஸ்வாமிஜியோ நீங்கள் விரைவில் பாட்டி ஆவீர்கள் என்று சொல்கிறாரே என்று. ஒருவேளை தன்னை சமாதானப் படுத்துவதற்காக சொல்கிறார் போல என்றே நினைத்தார். 


ஆனால் ஸ்வாமிஜி சமாதானத்திற்காக சொல்லவில்லை- சத்தியத்தையே சொன்னார் என்பது விரைவில் புரிந்தது- சரியாக மூன்று மாதத்தில் அமெரிக்காவில் உள்ள திருமதி ராஜேஸ்வரியின் மகள் கருவுற்றார்! பிப்ரவரி 17 2024 ரோஹினி நட்சத்தரத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு “முரளீதரன்” என்று பெயரிட்டனர்!

- Bharath Ganapathy Ji

Enchanting Experiences #5

 அனுபவம் அருமை - 5

https://www.facebook.com/share/VmuRyxzetjiG9a1F/?mibextid=wwXIfr

ஸ்ரீ கணேஷ் வேலூரை சேர்ந்தவர். அவர் குடும்பமே ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் பக்தியும், ப்ரியமும் கொண்டவர்கள். குடும்பமாக நாமம் சொல்வதோடு, அவர்கள் ஊரில் நிறைய நாம கைங்கர்யமும் செய்து வருகின்றனர். 

அவர் ஒரு அரசுத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பணிக்காலத்தின் அடிப்படையில், 2024ன் முடிவில் அவருக்கு பதவி உயர்வு வரவேண்டும். அவருக்கு அது சந்தோஷம் என்றாலும், பொதுவாக பதவி உயர்வின் போது, பணிமாறுதலும் (transfer) வரும். இது பொதுவான நடைமுறை. இதை தவிர்க்கமுடியாது. Transfer வந்தால் குழந்தையின் கல்வி, கைங்கர்யம் தடைபடுமே, என்ன செய்யலாம் என்று கலக்கம். 

December 11 ஏகாதசியன்று மதுரபுரி ஆஸ்ரமம் வந்திருந்த ஸ்ரீ கணேஷ் இந்த விஷயங்களை ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் விவரித்தார். அனைத்தையும் கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும்- எந்த கலக்கமும் வேண்டாம் என்று ஆசியளித்தார். அவரும் நம்பிக்கையுடன் திரும்பி சென்றார். 

மறுநாளே (டிசம்பர் 12) promotion and transfer orders வந்தது. இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னவெனில், அவர் promotionல் join செய்யவேண்டிய அலுவலகமும் அதே ஊரில், அதே வளாகத்திலேயே உள்ளது! Promotion வந்தது, transfer வந்தது - ஆனால் அதே ஊரில், அதே வளாகத்தில்! இன்னொரு ஆச்சர்யம்- 62 பேருக்கு வழங்கப்பட்ட பதவியுயர்வு நியமனத்தில் ஸ்ரீ கணேஷ் ஒருவருக்கு மட்டுமே இப்படி நடந்தது. குருக்ருபையில் எதுதான் சாத்தியமில்லை!

- Bharath Ganapathy Ji

Enchanting Experiences #4

 ப்ரேமிகவிட்டலன் மற்றும் ராமகிருஷ்ணன் நமது கலெடிப்பேட்டை நாமத்வாரை சேர்ந்த சிறுவர்கள். அவர்களுக்கு 15/16 வயதிருக்கும். பிறந்தது முதலே நம் சத்சங்கத்தில் இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 1 2024 சென்னை, கூடுவாஞ்சேரி அபயம் பஜனை மந்திரில் ஸ்ரீ ஸ்வாமிஜி, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஆசிரமம் திரும்பி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராமகிருஷ்ணன் மற்றும் ப்ரேமிகவிட்டலன் bikeல் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களை பார்த்துவிட்டார். தனது காரை அவர்கள் அருகில் சென்று நிறுத்திவிட்டார். அவர்களுடைய வண்டி சாவியை வாங்கிக்கொண்டார். 


அவர்களிடம் licence எங்கே? ஏன் helmet அணியவில்லை என்று கடுமையான் தொனியில் கேட்டார். பயந்து போன அந்த சிறுவர்கள் licence இல்லை, ஹெல்மெட் எடுத்து வரவில்லை என்று சமாளித்தனர். ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம் நீங்கள் fine (அபராதம்) கட்டவேண்டும் என்று கூறினார். 

அதை கேட்ட சிறுவர்கள், “குருஜி, நாங்கள் வேண்டுமானால் மூன்று முறை ஹரே ராமா மஹாமந்திரம் சொல்கிறோம்- எங்களை மன்னித்து விடுங்கள்“ என்று கூறினர். அந்த பதிலை கேட்ட ஸ்ரீ ஸ்வாமிஜி மிகவும் நெகிழ்ந்தார். அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தார்.

- Bharath Ganapathy ji

Enchanting Experiences #3

 சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்வாமிஜியை தரிசனம் செய்ய ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவர்கள், தங்களுடைய குழந்தை ஜாதகத்தை காண்பித்து, “எப்பொழுது கல்யாணம் ஆகும்?”என்று கேட்டார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜியும் சிரித்தபடியே, “சீக்கிரம் நடக்கும், கவலை வேண்டாம்” என்றார். அவர்கள் மீண்டும் மீண்டும், “என்ன பரிகாரம் செய்யலாம்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜியும்


, “தங்கள் வீட்டிற்கு அருகில் நவகிரகம் சந்நிதி இருந்தால், தினமும் ப்ரதக்ஷிணம் செய்து வாருங்கள்” என்றார். அவர்களோ, “தங்கள் வீட்டின் அருகில் அப்படி எந்த சந்நிதியும் இல்லை”, என்றார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜி உடனே அந்த ஜாதகத்தை கையில் வாங்கி சில நிமிடங்கள் ஜபம் செய்தார். மீண்டும் அந்த ஜாதகத்தை அவர்களிடம் கொடுத்து, “இதை ஒரு அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள். ஒரு Stoolல் வைத்து நவக்கிரகத்தை சுற்றி வருவது போல் தினமும் சுற்றி வாருங்கள்”. என்றார். வெகு நாட்கள் கழித்து ஒரு Public Programல் ஸ்ரீ ஸ்வாமிஜியை தரிசனம் செய்தார்கள்.“தாங்கள் சொன்னது போலவே செய்தோம், ஒரு மாதத்தில் கல்யாணம் கைகூடிவிட்டது” என்றார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம் சிரித்துக் கொண்டே, “உங்கள் நம்பிக்கை தான் எல்லாவற்றிக்கும் காரணம்” என்றார்.

Enchanting Experiences #2

 ஸ்ரீநிவாஸன் ஸ்ரீ ஸ்வாமிஜியின் பரம பக்தர். பரம பாகவதர். ஸ்ரீ ஸ்வாமிஜி ஆரம்ப


காலத்தில், தினமும் ப்ரேமிக பவனத்தில் கீர்த்தனம் செய்வார். மாலை 6 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 11-12 மணி என்று போய்க் கொண்டே இருக்கும். அப்பொழுது முதல், தினமும் கீர்த்தனத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீநிவாஸன் டோல்கீ வாசிப்பார். அவர் இப்பொழுது சொந்தமாக Company ஆரம்பித்து பெரிய Businessman ஆகிவிட்டார். 2024 நவம்பர் 8ம் தேதி அவர் கட்டிய புதிய வீட்டிற்கு க்ருஹபிரவேசம்-ஸ்ரீ ஸ்வாமிஜியை அழைத்திருந்தார். ஸ்ரீ ஸ்வாமிஜியும் மாலை 4 மணி அளவில் சென்றிருந்தார். வீட்டை எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு ஒரு இடத்தில் அமர்ந்தார். அப்பொழுது, ஸ்ரீ ஸ்வாமிஜியின் கண்கள் யாரையோ தேடியது. நம்முடைய ஸத்ஸங்கத்தை சேர்ந்த மேதா வெங்கட்ராமன், ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு சொந்தம். ஸ்ரீ ஸ்வாமிஜி மேதா வெங்கட்ராமனை அழைத்து அமர சொன்னார். பிறகு மேதா வெங்கட்ராமனை பார்த்து "இன்று போல் என்றும் எனை நீ காத்திடல் வேண்டும்" என்ற மதுரகீதம் பாடலை பாட சொன்னார். அவ்வளவுதான், ஸ்ரீநிவாசன் ஒரே ஆனந்த கூத்தாடி அழ ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீ ஸ்வாமிஜி அவரைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் சிரித்தார். விஷயம் என்னவென்றால், அவர் காலையிலேயே மேதா வெங்கட்ராமனை அழைத்து, இன்று ஸ்ரீ ஸ்வாமிஜி வருவார், யாராவது பாடுகின்றீர்களா என்று கேட்டால், நான் பாடுகின்றேன் என்று சொல்ல வேண்டும். அதுவும் "இன்று போல் என்றும் எனை நீ காத்திடல் வேண்டும்" என்ற மதுரகீத கீர்த்தனையைத் தான் பாட வேண்டும், என்று பலமுறை சொல்லி வைத்திருந்தார். அதை அப்படியே நிகழ்த்தி காட்டியவுடன், அவருடைய அனுபவம் ஆச்சர்யம் கலந்த ஆனந்தமாக அமைந்தது.

Barsana - Ashtasakhis join Sri Radha Rani

 By the causeless grace of Sri Swamini Srimathi Radha devi and as ordained by our beloved Sri Swamiji through the Jaya Hanuman Seva Trust,  The  Ashtasakhis samarpan day at the divine temple of Sri Swami Radharani, Barsana happened today (15.12.24) with great pomp and splendour. Thousands of devotees thronged to see this beautiful, divine darshan of Shrimathi Radharani with Bhagavan Sri Krishna, along with ashtasakhis, each doing a seva to the divine yugal sarkar in Barsana. It was a day to remember for all devotees.



Ocean of Bliss flowed in Sri Jagannath Puri Chariot Streets

Nov 25. 2024
This date shall be etched in the memory of thousands of our satsang devotees!
Sri Swamiji had announced a grand nagar-sankirtan in the broad ‘Grand road’ just outside the Simha-dwaar of Puri Sri Jagannath temple this day at 7:30 am.

Just less than two thousand devotees assembled to participate in this unique divine experience of nagar kirtan, that too with our beloved Sri Swamiji, especially in the divine dhaam of Puri right outside Sri Jagannath temple East Entrance. Sri Swamiji arrived promptly with a Jagannathji shawl and a fresh flower garland.

More than a thousand and a half devotees with Love in their hearts and name in their lips eager to be with Sri Swamiji yet maintained great discipline. The sisters of our satsang to swamiji’s left on the back and brothers to the right!

Sri Swamiji started the kirtan with a shikshastakam shlokam and then the nectarine rain of mahamantra showered in the streets!

Sri swamiji soon started dancing sweetly to the chants of mahamantra. All the  devotees had heard about the divine bliss of mahamantra with Sri Chaitanya mahaprabhu through the lectures of Sri swamiji and many confided that they could experience what they heard this day!!

Sri swamiji chanted, clapped, danced, hopped, jumped, twirled, swirled, whirled, rolled with divine ecstasy!! A divine wave of bliss drenched the devotees who were present there.  And so were the devotees who witnessed this divine spectacle vicariously live in youtube.

The whole procession circumambulated the temple’s outer paths and Sri swamiji shared a divine secret with the devotees out of immense compassion and love

“It was November 2007. Our beloved Sri Sri Anna had taken lot of devotees for a Sapthaha Mahitsavam at the divine dhaam of Navadweepam in West Bengal. Sri swamiji used to send our Sri Venkatesanji wherever Sri Sri Anna travels for satsang yatras. That year was no exception. At Navadweepam one day morning Sri Sri Anna called Sri Venkatesan aside and said, “I had a divine vision today morning. In that I saw Muralidhara Swamiji doing Mahamantra kirtan in the temple streets Jagannatha Puri with thousands of fortunate devotees from South India. It shall come to pass soon.”

That fortunate event verily was this!
That fortunate day was this day!
Those fortunate devotees are these!

Jai Jagannath!!











 



நவம்பர் 25, 2024

இந்நாள் நமது சத்சங்கத்தின் பல்லாயிர அன்பர்களின் மனதில் நீங்காது நிறைந்து நிற்கும் நாளானது.

காலை 7.30மணி அளவில் பூரி ஸ்ரீஜகன்னாதர் ஆலய சிம்மத்வாரத்தின் வெளியிலுள்ள பெருவீதியில், பெரிய நகரகீர்த்தனம் நிகழ்த்துவது என ஸ்ரீஸ்வாமிஜி அறிவித்து இருந்தார்கள்.

ஸ்ரீஸ்வாமிஜி அவர்களுடன், அதுவும் பூரியில், மேலும் ஸ்ரீஜகன்னாதரின் காலடியிலே கீர்த்தனம் செய்ய ஆவலுடனும், பக்தியுடனும் ஸ்ரீஜகன்னாதர் ஆலய கிழக்கு கோபுரவாசல் வெளியே சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் காலையில் அதுபடி குழுமினர்.

ஸ்ரீஸ்வாமிஜி அவர்களும் ஜகன்னாதரின் ஒரு Shawlஐ(ஷால்) மேலே போர்த்தியவாறும் ஒரு புது பூமாலை அணிந்தபடியும் குறித்த நேரத்தில் வந்தார்.

ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நம் சத்சங்க சகோதரர்களும் சகோதரிகளும் கட்டுக்கோப்பாக ஓரோர் புறமாக நின்று வந்தபடி, இதயத்தில் அன்புடனும் நாவில் நாமத்துடனும் ஸ்ரீஸ்வாமிஜியுடன் சேர்ந்து கீர்த்தனம் செய்து நகர்ந்து வந்தது அருமையான காட்சி.

சிக்ஷாஷ்டக சுலோகம் ஒன்றை பாடி ஆரம்பித்தார் ஸ்ரீஸ்வாமிஜி. அதன்பின் முழுக்க மகாமந்திர அமுதமழைதான் தெருவில் பொழிந்தது என சொல்ல வேண்டும்.

ஸ்ரீஸ்வாமிஜியும் இயல்பாக மகாமந்திர தாளத்திற்கேற்றபடி ஆடிக் கொண்டே வந்தார்.

ஸ்ரீஸ்வாமிஜி பாடினார்; ஆடினார்; கரத்தாளமிட்டார்; குதித்தார்; சுழன்றார்; சுற்றினார்; உருண்டார்; பக்தபாவாவேசங்களில் மூழ்கினார்; அங்கிருந்தவர்களுக்கும் தெய்வீக பரவசம் தந்தார். அங்கு குழுமி இருந்தோர்மேல் ஒரு ஆனந்த அலை வீசியது.

யூடியூபில் நேரலையாக ஔிபரப்பு செய்யப்பட்ட இந்த நகரகீர்த்தனையை கண்ணுற்ற எண்ணற்றோரும் அந்த தெய்வீக ஆனந்த சுகம் அனுபவித்தனர்.

மகாமந்திர நகரகீர்த்தனம் கோவிலின் வெளிவீதிகளை வலம் வந்து பூர்த்தியாக, ஒரு தேவ ரகசியத்தை ஸ்ரீஸ்வாமிஜி அன்பர்களுடன் பரிவுடன் பகிர்ந்துகொண்டார்.

நவம்பர் 2007 வாக்கில் நமது ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்கள் பல பக்தர்களை வங்காளத்திலுள்ள நவத்வீபத்திற்கு ஒரு பாகவத சப்தாஹத்திற்காக அழைத்து சென்றிருந்தார். அப்பொழுது ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்கள் யாத்திரை சென்றபொழுதெல்லாம் ஸ்ரீஸ்வாமிஜி நம் சத்சங்க அன்பர் ஸ்ரீவெங்கடேசனை அனுப்பிவைப்பது வழக்கம். அம்முறையும் ஸ்ரீவெங்கடேசனை ஸ்ரீஸ்வாமிஜி அனுப்பி வைத்து இருந்தார்.

நவத்வீபத்திலே ஒருநாள் ஸ்ரீவெங்கடேசனை அருகில் அழைத்த ஸ்ரீஸ்ரீ அண்ணா அவர்கள், “நான் ஒரு தெய்வீக ஸ்வப்னம் கண்டேன். அதில் ஸ்ரீபூரிஜகன்னாதர் கோவில் வீதிகளில் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி மகாமந்திர கீர்த்தனையை பாக்யவான்களான பல்லாயிரம் அன்பர்களுடன் சேர்ந்து நகரகீர்த்தனமாக செய்வதை பார்த்தேன். இது விரைவில் நடக்கும்” என்றார்.

அந்த பாக்ய-நிகழ்வு இதுவே!
அந்த பாக்ய-தினம் இன்று!
அந்த பாக்ய-அன்பர்கள் இவர்களே!

ஜய் ஜகன்னாத் !!

Enchanting Experiences #1

அனுபவம் அருமை - 1

தூத்துக்குடி நேரு பிரகாஷ் அவர்கள் நம் சத்சங்கத்தை சேர்ந்தவர். அவர் தான் தூத்துக்குடி நாமத்வாரை கட்டி கொடுத்தவர். அதை நன்றாக நடத்தியும் வருகிறார். சென்ற மாதத்தில் ஒரு நாள் அவருடைய மகன் விக்கேஷ் ஸ்ரீ ஸ்வாமிஜியை பார்க்க ப்ரேமிக பவனம் வந்திருந்தார். அப்பொழுது அவருடைய

மனைவிக்கு வளைகாப்பு செய்வதற்கு நல்ல நாள், மற்றும் நேரம் இவைகளை குறித்து கொடுத்தார். ஆடி பூரத்தன்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றிய வளையல்கள் இருந்தால் பிரசாதமாக கொடுத்து அனுப்பலாமே என்று நினைத்து தேடினார். ஆனால் ப்ரேமிக பவனத்தில் அந்த வளையல்கள் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீ தீனதயாளன் என்ற பக்தர் குடும்பத்துடன் தர்சனத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் தான் படைவீடு சென்று ரேணுகா தேவியை தர்சித்து வருவதாகவும், அப்பொழுது அங்கு பூஜை செய்பவர் ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இந்த பையை தர சொன்னார் என்று ஒரு பையை தந்தார். பையை திறந்து பார்த்தால், பை நிறைய வளையல்கள். அதை விக்கேஷிடம் அப்படியே கொடுத்தார். 

அப்பொழுது ஸ்ரீ ஸ்வாமிஜி பக்கத்தில் இருப்பவரிடம், “*சிலர் யோக சித்தியால் நினைத்த பொருளை வர வைப்பார்கள்; நமக்கு அது தேவையில்லை. ஏனெனில் நமக்கு தேவையான பொருளை பகவானே நம் கையில் கொண்டு போட்டு விடுகிறார்!* “ என்றார்.